உலகம்

அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு.. பெரும் சேதம்.!

Summary:

அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு.. பெரும் சேதம்.!

உலகளவில் நிலநடுக்கம் என்பது இயற்கை சீற்றங்களில் தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது. பல்வேறு நாடுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்படுவது, அதனால் மக்கள் பாதிக்கப்படுவது என்ற சூழ்நிலைக்கு மக்கள் பழகி வருகின்றனர். அமெரிக்கா, ஜப்பான், இந்தோனேஷியா போன்ற நாட்டிலும் நிலநடுக்கம் ஏற்படுகின்றன. 

இந்நிலையில், மத்திய அமெரிக்காவில் உள்ள கவுதமாலா நகரில், சக்திவாய்ந்த அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. இதனால் அங்குள்ள பல அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து விழுந்திருப்பதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளன. மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு மீட்புப்பணிகளில் ஈடுபட விரைந்துள்ளனர். 


Advertisement