தீப்பற்றி எறிந்த கார்; சுதாரிப்பாக செயல்பட்டு பெண்ணின் உயிரை காப்பாற்றிய காவலர்.. ஷாக் வீடியோ வைரல்.!

அமெரிக்காவில் உள்ள ஜியார்ஜியா மாகாணம், தேசிய நெடுஞ்சாலை 46ல் கார் தீப்பிடித்து எரிந்துகொண்டு இருந்தது. காரில் பெண்மணி ஒருவர் பயணம் செய்துள்ளார்.
அவர் காருக்குள்ளேயே சிக்கிக்கொண்ட நிலையில், பதற்றத்தில் வெளியே வர இயலாமல் தவித்துள்ளார். காருக்குள் கரும்புகை சூழ்ந்துகொண்டுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த Candler நகர காவலர் Ashleigh Taylor என்பவர், துரிதமாக சுதாரிப்புடன் செயல்பட்டு பெண்மணியின் உயிரை காப்பாற்றினார்.
ஒருசில நொடிகளில் காவலர் விரைந்து செயல்பட்டது அவரின் உடலில் பொருத்தப்பட்டு இருக்கும் கேமிரா காட்சிகளில் பதிவாகியுள்ளது. காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.