உலகம்

பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்கா அதிரடி நடவடிக்கை; ரூ.2,100 கோடி நிதியுதவி ரத்து

Summary:

பாகிஸ்தான் ராணுவத்தில் பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொள்ள அமெரிக்க ராணுவம் வழங்கும் 300 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.2 ஆயிரம் கோடி) நிதியுதவியை நிறுத்தி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் சொர்க்க பூமியாக இருந்து வருகிறது என்பதில் அமெரிக்கா மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது.

குறிப்பாக ஆப்கானிஸ்தானில் இயங்கி வருகிற தலீபான் பயங்கரவாத இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ள ஹக்கானி வலைச்சமூக பயங்கரவாதிகள், பாகிஸ்தானில் இருந்து கொண்டு, சதித்திட்டம் தீட்டி, ஆப்கானிஸ்தானில் தாக்குதல்கள் நடத்தி அமெரிக்க படையினரையும், ஆப்கானிஸ்தான் படையினரையும் கொன்று வருவதாக அமெரிக்கா கருதுகிறது.

trumph க்கான பட முடிவு

உலக அளவிலான பயங்கரவாத ஒழிப்பு போரில் அமெரிக்காவின் கூட்டாளியாக உள்ள பாகிஸ்தான், அதற்காக அமெரிக்காவின் நிதி உதவியை பெற்று வருகிற பாகிஸ்தான், அந்த பயங்கரவாத இயக்கங்களை ஒடுக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதில்லை என்பதில் டிரம்ப் நிர்வாகம் அதிருப்தி அடைந்து உள்ளது.

இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவில் உள்ள சர்வதேச ராணுவ பள்ளியில் பாகிஸ்தான் வீரர்கள் சேர தடை விதிக்கப்பட்டது. அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் உண்டாகியது. இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தில் பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொள்ள அமெரிக்க ராணுவம் வழங்கும் 300 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.2,100 கோடி) நிதியுதவியை நிறுத்தி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


Advertisement