திரைப்பட பாணியில் பாய்ந்த கார்; பதைபதைப்பை கொடுக்கும் வைரல் வீடியோ..!
அமெரிக்காவில் உள்ள ஜியார்ஜியா மாகாணம், லவுண்டஸ் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காவல் அதிகாரி தனது கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்.
அப்போது, அந்த சாலை வழியே அதிவேகமாக பயணித்த கார், டிரக் மீது மோதி திரைப்பட பாணியில் மேல்நோக்கி பாய்ந்து கீழே விழுந்தது.
விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து காவலர் காரில் சிக்கிய பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். அவர் நலமுடன் இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.