என்ன அதிசயம்! ஒரே நேரத்தில் 9 நர்சுகளும் கர்பம்; மண்டையைப் பிய்த்துக் கொள்ளும் நிர்வாகம்.!

என்ன அதிசயம்! ஒரே நேரத்தில் 9 நர்சுகளும் கர்பம்; மண்டையைப் பிய்த்துக் கொள்ளும் நிர்வாகம்.!


america---portland---hospital---9-nurse-pragnent

அமெரிக்காவின் போர்ட்லேண்ட் என்ற பகுதியில் பெண்களின் பிரசவத்திற்கென்றே மருத்துவம் பார்க்க பிரத்யேக மருத்துவமனை ஒன்று உள்ளது. அம்மருத்துவமனையில் பணிபுரியும் 9 நர்சுகளும் திருமணம் ஆனவர்கள். பணி நிமித்தம் இன்றியும் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு நெருக்கமாகவும் ஒற்றுமையாகவும் பழகி வந்துள்ளார்கள்.

hospital

திருமணம் ஆனவர்கள் என்பதால் ஒருவர் பின் ஒருவராக கர்பம் அடைந்துள்ளனர். ஒரு கட்டத்தில் பார்த்தாள் அனைவரும் கர்ப்பிணியாக இருந்துள்ளார்கள். இது அந்த மருத்துவமனை நிர்வாகத்திற்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவலை தனது பேஸ்புக் பக்கத்தில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

hospital

இவர்களுக்கு ஏப்ரல்-ஜூலை மாதங்களில் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மண்டையைப் பிய்த்துக் கொண்ட நிர்வாகம் அனைவருக்கும் விடுப்பு அளித்து அவர்களுக்கு பதிலாக வேறு பணியாளர்களை நியமிக்க முடிவு எடுத்துள்ளது. மேலும் அவர்கள் அனைவரையும் அதே மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்க அவர்களது குடும்பத்தினரிடம் கேட்டுக்கொண்டுள்ளது.