உஷாரான பாகிஸ்தான் விமான சேவைக்கு தடைவிதித்து அதிரடி உத்தரவு.!

உஷாரான பாகிஸ்தான் விமான சேவைக்கு தடைவிதித்து அதிரடி உத்தரவு.!


alart pakistan - airoplane travels stop

புல்வாமாவில் கடந்த 14ம் தேதி சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனம் மீது கோழைத்தனமாக தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில், 40க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

இந்நிலையில் இந்திய விமானப்படை வீரர்கள், இந்தியா- பாகிஸ்தான் எல்லை ஓரம், மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த தீவிரவாதிகள் முகாம் மீது சுமார் 1000 கிலோ எடைகொண்ட குண்டுகளை வீசி பதறவைக்கும் பதிலடி கொடுத்துள்ளது.

இந்த பயங்கர தாக்குதலில், சுமார் 300க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

India

இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவில் ஜம்மு-ஸ்ரீநகர் லே, பதன்கோட் ஆகிய விமான நிலையங்களுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியின் வான்பகுதியில் பயணிகள் விமானங்களும் பறக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தற்சமயம் பாகிஸ்தான் முழுவதும் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அனைத்து உள்நாட்டு வெளிநாட்டு விமான சேவையை ரத்து செய்தது பாகிஸ்தான் அரசு. மறு உத்தரவு வரும் வரை விமானங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.