உலகம்

விமானத்தில் பயணியை மிரட்டிய விமான பணி பெண் - காரணம் இதானா, வீடியோ உள்ளே!

Summary:

Airline women worker angry with the passenger

பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கு சென்ற ஈசிலெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது விமானத்தில் பயணித்த பெண் ஒருவரின் 2 வயது குழந்தை சிட்டில் உட்காராமல் நின்று கொண்டும் பின்னால் இருப்பவர்களுக்கு இடையுராகவும் இருந்து வந்தது.

இதனை கவனித்த விமான பணிப்பெண் ஒருவர் அந்த குழந்தையின் அம்மாவிடம் உங்கள் குழந்தையை பார்த்து கொள்ளுங்கள். இல்லையென்றால் சுத்தம் செய்வதற்கு 100 பவுண்ட் செலவு செய்ய வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார்.

அதனை அருகிலிருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். வீடியோவை பார்த்த பலர் அந்த பெண் ஊழியர் கூறியது சரி என கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் அவர் அவ்வாறு கூறியதற்கு முக்கிய காரணம் குழந்தையின் நலன் கருதி தான் எனவும் கூறி வருகின்றனர். 


Advertisement