திடீரென கிளம்பிய புழுதி புயல்.! 22 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி ஏற்பட்ட கோர விபத்து.! 8 பேர் பலி

திடீரென கிளம்பிய புழுதி புயல்.! 22 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி ஏற்பட்ட கோர விபத்து.! 8 பேர் பலி


accident in america

அமெரிக்காவின் உட்டா மாகாணம் கனோஸ் நகருக்கு அருகே மிகப்பெரிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து ஒன்றன் பின் ஒன்று செல்வது வழக்கம். இந்தநிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் வழக்கத்தை விடவும் போக்குவரத்து மிகவும் நெரிசலாக இருந்தது.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை அங்கு திடீரென பலத்த காற்று வீசியது. அதனை தொடர்ந்து அங்கு புழுதி‌ புயல் உருவானது. இதனால் நெடுஞ்சாலையில் சென்ற வாகன ஓட்டிகளுக்கு, முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாமல் தடுமாறியுள்ளனர். அப்போது அந்த நெடுஞ்சாலையில் வேகமாக வந்த லாரி ஒன்று முன்னால் சென்ற ஒரு காரின் மீது மோதி நின்றது. 

இதனையடுத்து அந்த லாரிக்கு பின்னால் வந்து கொண்டிருந்த வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி சுமார் 22 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. புழுதி‌ புயல்  காரணமாக ஏற்பட்ட இந்த விபத்தில் 4 சிறுவர்கள் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.