உலகம்

சிறிய தவறால் வேலைக்கு வந்த 8 வயது பிஞ்சுகுழந்தைக்கு நேர்ந்த கொடூரம்! நாட்டையே உலுக்கிய பகீர் சம்பவம்!

Summary:

8 year child killed in pakistan to leave birds free

தெற்கு பஞ்சாபில் முசாபர்கர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் வறுமையின் காரணமாக தனது 8 வயது மகள் ஷோஹ்ரா ஷாவை கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தானில் ராவல்பிண்டி பகுதியில் வசித்துவந்த  ஹாசன் சித்திக் மற்றும் உம்மீ குல்சன் தம்பதியினரின் வீட்டிற்கு அங்கே தங்கி வேலை செய்வதற்காக அனுப்பியுள்ளனர்.

அவர் வேலையில் சேர்ந்ததில் இருந்து தம்பதியினர், சிறுமியை பல வழிகளில் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, கடுமையாக அடிபட்டு உயிருக்கு போராடிய நிலையில் சிறுமி சோஹ்ராவை ராவல்பிண்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் விபத்து என கூறி ஹாசன் சித்திக் அனுமதித்துவிட்டு அங்கிருந்து மாயமானார்.

இந்நிலையில் சிறுமியின் உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடல் முழுவதும் பயங்கரமாக அடித்து, சித்ரவதை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் இருப்பதை கண்டு பேரதிர்ச்சி அடைந்தனர். மேலும் சிறுமியின் உடலில் இருந்து அதிக அளவு இரத்தம் வெளியேறியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் ஹாசன் சித்திக் மற்றும் அவரது மனைவி இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது சிறுமி சோஹ்ரா,  விலையுயர்ந்த பறவையை கூண்டிலிருந்து வெளியேற்றியதால் ஆத்திரத்தில் ஹாசன் மற்றும் அவரது மனைவி சிறுமியை அடித்து சூடு வைத்து கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சிறுமி சோப்ரா சிகிச்சை பலனின்றி சமீபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் தம்பதியினருக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் பலரும் குரலெழுப்பி வருகின்றனர். மேலும் இத்தகைய கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement