உலகம்

5 மாத குழந்தை 32 நாட்கள் கோமாவில் இருந்து கொரோனாவை தோற்கடித்தது..! அதிசயத்தைப் பார்த்து அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்.!

Summary:

5 months old baby boy returns home after spending 32 days in a coma

உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸில் இருந்து பிரேசிலை சேர்ந்த ஐந்து மாத ஆண் குழந்தை கொரோனா வைரஸுடன் போராட்டத்தில் 32 நாட்கள் கோமாவில் இருந்து பின்னர் வீடு திரும்பிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து குழந்தையின் பெற்றோர் கூறுகையில், குழந்தை பிறந்து சில மாதங்களில் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்தது, எனவே மருத்துவரை சந்தித்தபோது இது ஒரு பாக்டீரியா தொற்று என்று மருத்துவர்கள் நினைத்தார்கள்.

ஆனால் அவர்கள் கொடுத்த மருந்து வேலை செய்யவில்லை, குழந்தையின் உடல்நிலை மோசமடைந்தது. பின்னர் நானும் என் மனைவியும் குழந்தையை இரண்டாவது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தோம், அங்கு குழந்தைக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் உறுதியானது.

குழந்தையை வைரஸ் எவ்வாறு பாதித்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் உறவினரின் வீட்டிற்குச் சென்றபின் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று பெற்றோர்கள் நினைக்கிறார்கள்.

குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நாட்களில் கோமா நிலைக்கு சென்றுள்ளது. கிட்டத்தட்ட 32 நாட்கள் குழந்தை கோமா நிலையில் இருந்த நிலையில் சில சமயங்களில் நாங்கள் குழந்தையை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வர மாட்டோம் என்று நினைத்ததாக குழந்தையின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

ஒருவழியாக குழந்தை நீண்ட போராட்டத்திற்கு பிறகு கொரோனாவில் இருந்து மீண்டு வெளியே வந்துள்ளது. தற்போது குழந்தை மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாகவும், இன்று (ஜூன் 14) அவன் பிறந்ததிலிருந்து ஆறு மாதங்கள் முடிவடையும் நிலையில் அவரது பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாட இருப்பதாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.


Advertisement