இனி பொண்டாட்டி தொல்லை இல்லை! சுதந்திரம் கிடைத்தது.. 40 லிட்டர் பாலில் குளித்து தானே அபிஷேகம் செய்து கொண்டாடிய கணவன்! வைரலாகும் வீடியோ....



assam-man-celebrates-divorce-with-milk-bath-video-viral

அசாமில் விவாகரத்து பெற்றவர் பாலில் குளித்து கொண்டாட்டம் செய்த வீடியோ வைரல்.

அசாம் மாநிலத்தின் நல்பாரி மாவட்டத்தில் உள்ள பரலியாபர் கிராமத்தில் நடந்தது உண்மையிலேயே ஆச்சரியப்பட வைக்கும் சம்பவம். மாணிக் அலி என்ற நபர், தனது மனைவியிடம் இருந்து சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றதை ஒட்டி, 40 லிட்டர் பாலில் குளித்து, அதனை வாழ்க்கையின் புதிய அத்தியாயம் எனக் கொண்டாடியிருக்கிறார்.

மாணிக் அலியின் மனைவி, கடந்த சில மாதங்களாகவே ஒரு காதலனுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. காதலனுடன் இருமுறை வீட்டைவிட்டு வெளியேறும் அளவுக்கு சம்பவங்கள் நடந்துள்ளன. மகளின் நலனுக்காக மன்னித்து மீண்டும் ஏற்றுக்கொண்டிருந்த மாணிக், பிறகு மீண்டும் மனைவி காதலனுடன் தொடர்பில் இருப்பதை கண்டதும், விவாகரத்து தான் ஒரே தீர்வாக கருதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதையும் படிங்க: Video : ஓடும் ரயிலில் கதவருகே நின்று ரீல்ஸ் வீடியோ எடுத்த பெண்! ரீல்ஸ் பேய் பிடிச்சிருக்கு... தாறுமாறாக தலையிலே அடித்த அத்தை! வைரலாகும் வீடியோ...

விவாகரத்தை பெற்றதும், “இது எனது வாழ்க்கையின் புதிய தொடக்கம். சுதந்திரம் கிடைத்த இந்நாளை கொண்டாடவே பாலில் குளித்தேன்,” என கூறியுள்ளார் மாணிக் அலி. தற்போதும் மகள் தனது மாமியாருடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு, பலரும் இது ஒரு தனித்துவமான சம்பவம் எனக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: Video: நாரையின் அசத்தலான வேட்டை! ஒரே முயற்சியில் வெற்றியோடு ராஜநடை போடும் காட்சி! மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் காட்சி...