
3000 years old ancient mummy voice found
3000 ஆண்டுக்கு முன் இறந்து போன பெண் ஒருவரின் குரல் எப்படி இருந்திருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பொதுவாக எகிப்து நாடு என்றாலே அங்கு இருக்கும் பிரமீடுகளும், மம்மியும் தான் அனைவர்க்கும் நினைவுக்கு வரும்.
அந்த வகையில் எகிப்து நாட்டில் இருக்கும் மம்மிகளின் மீது பல சோதனைகள் நடைபெற்று வருகின்றன. மம்மிகள் என்றால் என்ன? இறந்துபோன மனிதன் அல்லது விலங்குகளின் உடல் உள்ளே இருக்கும் உறுப்புகளை நீக்கிவிட்டு, முறையாக பதப்படுத்தப்பட்டு, பென்டேஜுகளால் சுற்றப்பட்டு பாதுகாக்கப்பட்டிருக்கும்.
இதுபோன்று பாதுகாக்கப்பட்ட மம்மிகள் மீதுதான் இந்த ஆய்வு நடந்துவருகிறது. இந்நிலையில் எகிப்தில் உள்ள தீப்ஸ் என்ற பழமையான இடத்தில் இருந்து நெஸியாமன் என்பவரிம் மம்மியை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள் அதன் குரல் எப்படி இருக்கும் என்ற ஆய்வை மேற்கொண்டனர்.
அதன் முதல் கட்டமாக அந்த மம்மியை ஸ்கேன் செய்து, 3D பிரிண்டிங் உதவியுடன் அந்த மாமியின் குரல்வளையை உருவாக்கினார்கள். மருத்துவர்களால் உருவாக்கப்பட்ட குரல்வளை மூலம் சில எழுத்துகளை மட்டும் உச்சரிக்கும் வகையில் ஆய்வு மேற்கொண்டு அதில் வெற்றியும் கண்டுள்ளனர்.
இதன் அடுத்த கட்டமாக 3000 ஆண்டுகளுக்கு முன்னர் நெஸியாமன் எப்படி பேசியிருப்பார் என்பதையும் கண்டுபிடிக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement