இந்தியா உலகம் லைப் ஸ்டைல்

ஒரே நாளில் 41 கோடிக்கு அதிபதி ..! கொரோனோவால் கஷ்டத்தில் இருந்த கார் ஓட்டுனருக்கு அடித்தது ஜாக்பாட்.!

Summary:

3 Indian drivers in Ras Al Khaimah win Dh20m jackpot

அபுதாபி நாட்டில் வசித்துவரும் இந்தியாவின் கேரளாவை சேர்ந்த ஓடுன்னார் ஒருவருக்கு அபுதாபி நாட்டில் நடைபெற்ற லாட்டரி குழுக்கள் மூலம் பலகோடி ரூபாய் பரிசு விழுந்துள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்பட்ட வைத்துள்ளது.

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த ஜிஜேஷ் கொரோத்தன் என்பவர் தனது குடும்பத்துடன் அபுதாபியில் உள்ள அல் கைமாவில் கடந்த 15 ஆண்டுகளாக வாழ்ந்துவருகிறார். ஓட்டுநராக வேலைபார்த்துவரும் ஜிஜேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மாதாந்திர அபுதாபி 'பிக் டிக்கெட் லாட்டரி' சீட்டினை வாங்கியுள்ளார்.

இந்த லாட்டரி சீட்டிற்கான குழுக்கள் கடந்த 3 ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் வெளியானது. கொரோனா காரணமாக பொதுமக்கள் இன்றி குழுக்கள் இணையத்தில் ஒளிபரப்பானது. இதனை ஜிஜேஷ் கொரோத்தன் தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பார்த்துள்ளார்.

அப்போது, ஜிஜேஷ் கொரோத்தன் வாங்கிய '041779' என்ற சீட்டு எண்ணுக்கு, முதல் பரிசாக 20 மில்லியன் திர்ஹாம் அதாவது, இந்திய மதிப்பில் சுமார் 41 கோடி பரிசாக விழுந்துள்ளது.

இதனால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போன ஜிஜேஷ் கொரோத்தன் இந்த பரிசு தொகையை தனது நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளப்போவதாகவும், ஒரு பகுதி தொகையில் சொகுசு கார்கள் வாங்கி வாடகைக்கு விடப்போவதாகவும், தனது மகளின் படிப்பு செலவுக்கு பயனப்டுத்தப்போவதாகும் ஜிஜேஷ் கொரோத்தன் கூறியுள்ளார்.

மேலும், கொரோனா காரணமாக சமீப காலமாக வேலை இல்லாமல் மிகவும் சிரமப்பட்டதாகவும், தனது குடும்பத்தை மீண்டும் கேரளவுக்கே அனுப்பிவிடலாம் என முடிவு செய்திருந்த நிலையில் இந்த பரிசுத்தொகை தனது வாழ்வை மாற்றியுள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் ஜிஜேஷ் கொரோத்தன்.


Advertisement