உலகம்

அட கொடுமையே! அந்த விஷயத்திற்காக 81 வயது மூதாட்டியை மணந்த 21 வயது இளைஞன்!

Summary:

21 age young man marriaged 81 years old lady

உக்ரைன் நாட்டை சேர்ந்த அலெக்சாண்டர் கொன்ட்ராட்யுக் என்ற 24 வயது இளைஞர் 81 வயது முதாட்டியை மணந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் நாட்டில் இளைஞர் அனைவரும் கட்டாயம் இராணுவத்தில் சேர வேண்டும். எனவே அதிலிருந்து தப்பித்து கொள்ள அந்த பாட்டியை மணந்துள்ளார். அதாவது மனைவி மாற்றுத்திறனாளியாக இருந்தால் கணவர் இராணுவத்தில் சேர வேண்டிய கட்டாயம் இல்லை.

இதனால் அலெக்சாண்டர் தனது கிராமத்தில் உள்ள தூரத்து உறவு முறையான 81 வயதான ஸினைடா இல்லாரியோனோவ்னாவை மணந்துள்ளார். அந்த இளைஞரை இராணுவத்தில் சேர்த்து விடலாம் என்ற எண்ணத்தில் வரும் அதிகாரிகள் அலெக்சாண்டரின் திருமண சான்றிதழையும், 81 வயது மாற்றுத்திறனாளி என்பதற்கான சான்றிதழை பார்த்து விட்டு பின்வாங்கி விடுவார்கள். 

ஆனால் அலெக்சாண்டர் திருமணத்திற்கு பிறகு ஒரு முறை கூட தனது மனைவி வீட்டிற்கு வந்தது இல்லை என அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளார். ஆனால் அந்த முதாட்டி தனது கணவர் தன்னை நன்றாக பார்த்து கொள்கிறார் என கூறியுள்ளார். 


Advertisement