உலகம்

இளம்பெண்ணிற்கு முதல் குழந்தை பிறந்த மூன்றாவது மாதத்தில் 2வது குழந்தை! அபூர்வ நிகழ்வு!

Summary:

2 child for young women with in 3months gap


கசகஸ்தான் நாட்டில் இரட்டைக் குழந்தைகளை கர்ப்பத்தில் சுமந்த லில்லியா என்ற 11 வாரங்கள் வித்தியாசத்தில் தனது குழந்தைகள் இரண்டையும் பெற்றெடுத்தார். இவர் கடந்த மே மாதம் 24ஆம் தேதி லியா என்னும் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இதனையடுத்து ஆகஸ்ட்  மாதம் 9ஆம் தேதி ஆண்குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

இதனையடுத்து மருத்துவர்கள் ஆச்சரியமடைந்தனர். ஏனென்றால் இது ஒரு அபூர்வ நிகழ்வாகும், 50 மில்லியனில் ஒருவருக்குதான் இப்படி நடக்கும் என கூறுகின்றனர். இப்படி மூன்று மாத இடைவெளியில் குழந்தைகளைப் பெற்றெடுத்ததற்கு காரணம், அவரது உடலில் இரண்டு கர்ப்பப்பைகள் இருந்தது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இரட்டையர்களாக இருந்தாலும் தங்களுக்கென்று தனித்தனி கர்ப்பப்பைகளில் வளர்ந்திருக்கிறார்கள் இரண்டு குழந்தைகளும் .தனக்கு இப்படி ஒரு நிலைமை இருப்பதை அறிந்தபோது அதிர்ச்சியடைந்ததாகவும், மருத்துவர்களின் அக்கறையால் தான் நல்லபடியாக குழந்தை பெற்றெடுத்ததாகவும் லில்லியா கூறியுள்ளார்.


 


Advertisement