நடிகை தர்ஷா குப்தா உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. காரணம் என்ன?
16 வயது சிறுமிக்கு மருத்துவமனை கழிவறையில் நடந்த பிரசவம்! அடுத்த சில நிமிடங்களில் குப்பைத் தொட்டியில் பச்சிளம் குழந்தை! பகீர் காட்சி...!!!
துருக்கியின் மெர்சின் மாகாணத்தில் வயிற்று வலி காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 16 வயது சிறுமி, அங்குள்ள கழிவறையில் எதிர்பாராதவிதமாக பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். பிறந்த குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசியதாகக் கூறப்படும் சம்பவம் மருத்துவமனை ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து சிறுமி கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
மருத்துவமனை கழிவறையில் நடந்த பிரசவம்
மெர்சின் மாகாணத்தின் எர்டெம்லி மாவட்டத்தைச் சேர்ந்த எச்.இ.ஒய். என்ற 16 வயது சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் குடும்பத்தினர் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அவசரமாக கழிவறைக்குச் சென்ற சிறுமி, அங்கு யாரும் எதிர்பாராத நிலையில் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
இதையும் படிங்க: தங்கச் சிலையை கண்டு பச்சிளம் சிறுவன் கொடுத்த முத்தம்! அடுத்த நொடி அந்த கலைஞர் செய்த காரியம்..! குதூகலமான சிறுவன்...!!!
குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் குழந்தை
பிரசவத்துக்குப் பிறகு குழந்தையை கவனிக்காமல் கழிவறையில் இருந்த குப்பைத் தொட்டியில் வீசியதாக சிறுமி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பின்னர் கழிவறையைச் சுத்தம் செய்ய மருத்துவமனை ஊழியர்கள் சென்றபோது, குப்பைத் தொட்டிக்குள் பச்சிளம் குழந்தை கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மருத்துவ அதிகாரிகளுக்கும் காவல்துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர். குழந்தைக்கும் பிரசவித்த சிறுமிக்கும் தேவையான மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்ட பின்னர், எச்.இ.ஒய். காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
சிறுமியின் தாயிடமும் விசாரணை
விசாரணையின்போது சிறுமியின் தாய் ஆர்.எச். என்பவருக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகித்தனர். இதையடுத்து அவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றம் அவரை பிணையில் விடுவித்தது. தொடர்ந்து காவல்துறை விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மருத்துவமனையில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
KARIN AĞRISIYLA HASTANEYE GELEN 16 YAŞINDAKİ ÇOCUK TUVALETTE DOĞUM YAPTI
— Mustafa Kadir Mercan (@MercannBey) August 31, 2026
YENİ DOĞAN BEBEK ÇÖP KUTUSUNDA BULUNDU, 16 YAŞINDAKİ H.E.Y. TUTUKLANDI
Mersin’in Erdemli ilçesinde şiddetli karın ağrısı şikâyetiyle hastaneye götürülen 16 yaşındaki H.E.Y., hastane tuvaletinde doğum… pic.twitter.com/guiyNShU7U
இதையும் படிங்க: வெறும் 2 நொடிக்குள் குழந்தைகளின் உயிரை காப்பாற்ற ஓடோடிய தாய்! வெள்ளத்தில் தாய்மை நடத்திய வீரப் போராட்ட வீடியோ..!!!