உலகம்

இறுதிச்சடங்கில் கால்பந்து போட்டி! உயிரிழந்த தனது நண்பனை கோல் அடிக்கவைத்த இளைஞர்கள்! வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ!

Summary:

16 year boy dead in polive shot ax mexico

அமெரிக்காவை சேர்ந்தவர் அலெக்சாண்டர் மார்ட்டினெஸ் கோமேஸ். 16 வயது நிறைந்த இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மெக்சிகோவில் குடியேறினார். இந்நிலையில் இரட்டை குடியுரிமை பெற்ற அவர் கால்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் வசிக்கும் பகுதியில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் அலெக்சாண்டர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.  அதனைத் தொடர்ந்து அவருடைய இறுதிசடங்கில் அவரது நண்பர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

மேலும் அப்பொழுது அலெக்சாண்டருக்கு பிடித்த அனைத்தையும் அவர்கள் நிறைவேற்றியுள்ளனர். இந்நிலையில் அலெக்சாண்டர் கால்பந்து பிரியர் என்பதால், அவரது சவப்பெட்டியை சுற்றி நின்ற அவரது நண்பர்கள் கால் பந்து ஒன்றை அவரது சவப்பெட்டியை நோக்கி அடித்துள்ளனர்.

அப்பொழுது பந்து பெட்டியின் மீது பட்டு கோல் போஸ்டை தொட்டுள்ளது. இதனைக் கண்ட நண்பர்கள் அனைவரும் வேதனைமிகுந்த மகிழ்ச்சியோடு நண்பனின் சவப்பெட்டியை கட்டியணைத்து கதறி அழுதுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.


Advertisement