ஒரே காரில் 25 பேர் பயணம்.! திடீரென ஏற்பட்ட விபத்தில் 13 பேர் பலி.!

ஒரே காரில் 25 பேர் பயணம்.! திடீரென ஏற்பட்ட விபத்தில் 13 பேர் பலி.!


13-people-died-in-car-accident

அமெரிக்கா -மெக்சிகோ எல்லைக்கு அருகே நேற்று காலை 25 பேருக்கும்  அதிகமானவர்களை ஏற்றிச் சென்ற  கார் மீது  டிரக் ஒன்று மோதியது. அந்த விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதனையடுத்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் கூறுகையில், வாகனம் முழு சுமை சரளைகளைக் கொண்டிருந்த டிரக் ஒன்று காரில் நேரடியாக மோதியதால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

car accident

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கலிபோர்னியா நெடுஞ்சாலை ரோந்துத் தலைவர் ஒமர் வாட்சன் கூறுகையில், அந்த வாகனத்தில் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் பயணித்ததால் இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அவர் கூறினார்.