இந்த பெண்ணிற்கு ஒரே பிரசவத்தில் 10 குழந்தை பிறந்தது உண்மையா?? கணவன் கூறும் பல திடுக்கிடும் தகவல்கள்..

இந்த பெண்ணிற்கு ஒரே பிரசவத்தில் 10 குழந்தை பிறந்தது உண்மையா?? கணவன் கூறும் பல திடுக்கிடும் தகவல்கள்..


10 babies at single birth

ஒரே பிரசவத்தில் பெண்ணிற்கு 10 குழந்தைகள் பிறந்ததாக வெளியான தகவல் உண்மையா, பொய்யா என்பதே பெரும் மர்மமாக உள்ளது.

சமீபத்தில் உலகம் முழுவதும் ஒரு தகவல் வைரலானது. அதாவது தென் ஆப்ரிக்காவின் பிரிட்டோரியா மருத்துவமனையில் 37 வயதான Gosiame Sithole  என்ற பெண்ணிற்கு ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பிறந்ததாக கூறப்பட்டது. இதற்கு முன்னதாக ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளைப் பெற்றெடுத்ததே உலக சாதனையாக இருந்த நிலையில் Gosiame Sithole 10 குழந்தைகளை பெற்றெடுத்தது பெரிய சாதனையாக பார்க்கப்பட்டது.

இந்த தகவல் இணையதளங்களில் வெளியாகி கடும் வைரலானது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பேசியுள்ள அந்த பெண்ணின் கணவர் பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார்.

Viral News

அதில், தனது மனைவிக்கு பிரசவவலி வந்ததை அடுத்து அவரை கடந்த ஜூன் 7ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதித்தோம். அதன்பிறகு நானும், எனது குடும்பத்தினரும் எனது மனைவியை பார்க்க அனுமதிக்கப்படவில்லை. தனக்கு வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பிய தனது மனைவி, தனக்கு ஒரே பிரசவத்தில் 7 ஆண் மற்றும் 3 பெண் குழந்தைகள் பிறந்திருப்பதாக கூறினார்.

ஆனால் ஒரே ஒரு குழந்தையின் புகைப்படத்தை மட்டுமே தனக்கு அனுப்பினார். கொரோனா காரணமாக குழந்தைகளை பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை எனவும், நானும் இதுவரை குழந்தைகளை பார்க்கவில்லை எனவும் அவர் கூறியதாக Gosiame Sithole வின் கணவர் கூறியுள்ளார்.

மேலும், தான் வேறொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் மனைவி தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார். பல நாட்கள் ஆகியும் இதுவரை தனது மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்காததால், தனது மனைவியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் உண்மையிலையே என்ன நடந்தது? அந்த பெண்ணிற்கு 10 குழந்தைகள் பிறந்தது உண்மையா அல்லது பொய்யா என்ற எந்த தகவலும் இல்லை.