நடிகர் அரவிந்த் சாமியின் அப்பா யார் தெரியுமா? பலரும் அறியாத உண்மை!
Video : காதலித்து திருமணம் செய்ததால் வயலின் நடுவில் மாடுகளைப்போல் உழ வைத்த கிராம மக்கள்! அடுத்தடுத்து செய்த அதிர்ச்சிகரமான செயல்! கொடூர வீடியோ இதோ..
ஒடிசா மாநிலத்தின் ராயகடா மாவட்டத்தில் நடந்த ஒரு மனதை உலுக்கும் சம்பவம், சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகி, மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
காஞ்சமஜீரா கிராமத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக காதலித்து திருமணம் செய்த இளம் தம்பதியர் மீது கிராம மக்கள் மிருகத்தனமான தண்டனை வழங்கியுள்ளனர். பழக்க வழக்குகளை மீறியதற்காக, இருவரையும் மாடுகள் போல் கட்டி, வயலில் உழைக்க வைத்தனர்.
வயலின் நடுவில், மரத்தாலான யோக்கில் இருவரையும் கட்டி, குச்சிகளால் அடித்து, அவமானகரமான முறையில் வயலில் உழைப்பை கட்டாயமாக்கினர். இது மட்டுமல்லாது, அவர்கள் கிராம தெய்வ ஆலயத்திற்கு அழைத்து செல்லப்பட்டு, சுத்திகரிப்பு என்ற பெயரில் பழங்கால முறைப்படி சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதையும் படிங்க: மாமா இல்லாத நேரத்தில் அத்தையுடன் உல்லாசமாக இருந்த மருமகன்! இறுதியில் உறவினர்கள் சேர்ந்து செய்த அதிர்ச்சிகரமான சம்பவம்!
வைரலான வீடியோ
இந்த கொடுமையின் வீடியோ சமூக ஊடகங்களில் விரைவாக பரவ, மக்களில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர். ராயகடா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்வாதி குமார் தலைமையில் விசாரணைக் குழு அனுப்பப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட தம்பதிகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
பழக்க வழக்கங்களின் பெயரில் தொடர்ந்து நடக்கும் கொடுமைகள்
இந்த சம்பவம், கிராமப்புறங்களில் இன்னும் பழைய சமூகக் கட்டுப்பாடுகள் மற்றும் பழக்க வழக்குகளின் பெயரில் நடைபெறும் மனிதாபிமான மீறல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. இத்தகைய கொடுமைகளுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை அவசியம் என்பதை இந்த சம்பவம் மீண்டும் நினைவுபடுத்துகிறது.
---
तालिबानी होता समाज।
ग्रामीणों ने प्रेमी जोड़े को बांस और लकड़ी से बने हल में बांध दिया। दोनों ने गांव की कथित परंपराओं के खिलाफ जाकर शादी कर ली थी।
यह अमानवीयता ओडिशा की है।#Odisha pic.twitter.com/8c1N8TG6Ll
— Mukesh Mathur (@mukesh1275) July 11, 2025
இதையும் படிங்க: 45 வயது நபர் 6 வயது சிறுமியை 3-வது மனைவியாக ஏற்றுக்கொண்ட திருமணம்! 9 வயதுக்கு மேல் உறவு! சமூகத்தையே உலுக்கிய பகீர் சம்பவம்!