அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
ஆசிரியருடன் காதல்.. திருமணம் செய்ய மறுத்ததால் பெண் தற்கொலை.!!
ஆண் நண்பருடன் கல்லூரிக்கு சென்ற பெண் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம் நிகழ்ந்துள்ளது.
கல்லூரிக்குச் சென்றார்:
கர்நாடக மாநிலத்தில் உள்ள தக்ஷிண கன்னட மாவட்டத்தில் வசித்து வருபவர் அகன்ஷா (வயது 22). இவர் கடந்த ஆறு மாதங்களாக டெல்லியில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் சமீபத்தில் தான் பயின்று வந்த கல்லூரியில் ஆவணங்களை பெற பஞ்சாபில் இருக்கும் கல்லூரிக்கு சென்றுள்ளார்.
இதையும் படிங்க: ஆண் நண்பருடன் கல்லூரிக்கு சென்ற பெண் மர்ம மரணம்.. தொடரும் சந்தேகம்.!!

தற்கொலை செய்துகொண்டார்:
அப்போது திடீரென நான்காவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அகன்சாவுடன் அவரது ஆண் நண்பரான கேரளா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் சென்றதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.
பேராசிரியருடன் காதல்:
இதனால் மகளின் மரணத்தில் மர்மம் நிகழுவதாக கூறும் பெற்றோர், இது தொடர்பாக விசாரிக்க காவல்துறையினரிடம் கோரிக்கை வைத்து புகார் அளித்தனர். இந்நிலையில் இது தொடர்பான விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. அதாவது அகன்ஷா திருமணமான பேராசிரியர் ஜில் மேத்யூ என்பவருடன் காதல் உறவில் இருந்துள்ளார். இதனால் அவரை திருமணம் செய்ய வற்புறுத்திய நிலையில், மேத்யூ மறுப்பு தெரிவித்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் மேத்யூவிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: நிர்வாணமாக வீதியில் நடந்து சென்ற பெண்.. லீக்கான காட்சிகள்.!!