டெக்னாலஜி சமூகம்

உஷார்! இனி அப்படி செய்தால் நிச்சயம் சட்டப்படி நடவடிக்கை! வாட்ஸாப் நிறுவனம் அதிரடி அறிவிப்பு

Summary:

Whatsapp will take legal action on illegal usages

வாட்ஸாப்பினை தனிநபர் பயன்பாட்டை தவிர மற்ற தவறான அங்கீகரிக்கப்படாத விசயங்களுக்கு பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வாட்ஸ்-ஆப் நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் நாள்தோறும் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் உறையாடுவதற்காக வாட்ஸ்-ஆப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இந்தியாவில் மொபைல் டேட்டா விலையில் சரிவு ஏற்பட்ட பின்பு ஸ்மார்ட் போன் பயனாளர்கள் அதிகரித்து உள்ளனர்.

உண்மையில் வாட்ஸாப் செயலியில் அளிக்கப்பட்டுள்ள பல்வேறு அமசங்கள் ஒவ்வொருவருவருக்கும் பலவழிகளில் பயன்படுதிறது. வாட்ஸ்-ஆப்பின் முக்கிய நோக்கமே தனிநபர் பயன்பாடு மட்டுமே. எந்தவித தொழில் அல்லது விளம்பர ரீதியாக வாட்ஸாப்பினை பயன்படுத்த அனுமதி இல்லை.

ஆனால் இங்கு பலர் தங்கள் வியாபார தேவைகளுக்காகவும், செலவே இல்லாமல் விளம்பரம் செய்வதற்காகவும் வாட்ஸாப்பினை பயன்படுத்தி வருகின்றனர். இவர்களை தடுப்பதற்காகவே பல்க் மெசேஜ்களை அனுப்பவும், ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் ஒரு மெசேஜினை பார்வோர்டு செய்ய கூடாது என்றும் கட்டுழ்பாடு விதித்தது வாட்ஸாப்.

இருப்பினும் பலர் இன்னும் வாட்ஸாப்பினை தவறாக பயன்படுத்துவதனை கண்டறிய புதிய தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி மாதத்திற்கு 2 மில்லியன் வாட்ஸ்-ஆப் அக்கவுண்டுகளை நீக்கியுள்ளது. தற்பொழுது அதற்கும் ஒரு படி மேல் சென்று சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தனது FAQ பகுதியிலேயே குறிப்பிட்டுள்ளது.

அதாவது, சில தானியங்கி செயலிகள் மூலம் ஒரே நேரத்தில் பலருக்கு செய்திகளை அனுப்புவது, தவறான செய்திகளை மக்களிடையே பரப்புவது, தனிநபர் பயன்பாட்டினை தவிர்த்து வியாபார நோக்கத்தில் பயன்படுத்துவது இதைப்போன்ற தவறான நடவடிக்கைகள் அனைத்தையும் கண்டறிய வாட்ஸாப் நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தினை பயன்படுத்துகிறது.

எனவே அதில் சிக்குபவர்கள் மீது வரும் டிசம்பர் மாதம் 7, 2019 முதல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வாட்ஸாப் நிறுவனம் தனது FAQ பக்கத்திலே அதிகார்வபூர்வமாக அறிவித்துள்ளது.


Advertisement