1000 பேரை திடீரென வேலையில் இருந்து நீக்கிய பேடிஎம்; ஏஐ பயன்பாடு அறிமுகத்தால் அதிரடி.!

1000 பேரை திடீரென வேலையில் இருந்து நீக்கிய பேடிஎம்; ஏஐ பயன்பாடு அறிமுகத்தால் அதிரடி.!


paytm-1000-employees-lay-off

 

இந்தியாவில் ஆன்லைன் பண பரிவர்த்தனைக்கு பிரதானமாக உபயோகம் செய்யப்படும் பேடிஎம் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு திறனை நிறுவனத்தின் எதிர்காலம் கருதி அதிகரித்து இருக்கிறது. 

இதனால் தற்போது சுமார் 1000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்காக காத்திருந்த ஊழியர்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சர்வதேச அளவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாட்டால் பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்களின் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து வரும் நிலையில், பேடிஎம் தற்போது அதே செயலை மேற்கொண்டுள்ளது.