50 ஆண்டுகளுக்கு முன் விபத்தில் சிக்கிய விமானம் கண்டுபிடிப்பு!. அதனுடன் படைவீரர் உடல்!.

50 ஆண்டுகளுக்கு முன் விபத்தில் சிக்கிய விமானம் கண்டுபிடிப்பு!. அதனுடன் படைவீரர் உடல்!.



Mountaineers recover body of soldier and accident flight

 

50ஆண்டுகளுக்கு முன் விபத்தில் சிக்கிய இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானம், இமலயமலையில் உள்ள தாஹா பனிமலையில் அதன் உடைந்த பாகங்களும், விமானியின் உடலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இமயமலைப்பகுதியின் லாஹுல் பள்ளத்தாக்கில் தாக்கா பனிப்பகுதியை சுத்தம் செய்யும் பணியில் இந்திய மலையேற்ற அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர். ராஜீவ் ராவத் என்பவர் தலைமையில் 11 பேர் சேர்ந்த குழு  இதை சுத்தம் செய்யும் பணியில் இறங்கினர்.

flight

 அப்போது பனிப்பகுதியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, உடைந்த விமானத்தின் பகுதிகளும், அதன் அருகே மிகவும் அழுகிப்போன ஆண் ஒருவரின் உடலும் கண்டுபிடிக்கப்பட்டது.

அது குறித்து ராஜீவ் ராவத் கூறுகையில், இங்கு கிடக்கும் உதிரி பாகங்கள் 1968-ம் ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஏஎன்-12 ரக விமானத்தின் உடைந்த பாகங்களாகும்.

flight

இந்த விமானத்தில் அப்போது,98 பயணிகள் விமானிகள் உள்ளிட்ட 4 பேர் என மொத்தம் 102 பயணிகள் பயணித்தனர். சண்டிகரில் இருந்து லே பகுதிக்கு இந்த விமானம் பறந்தபோது அப்போது மோசமான காலநிலையில் விபத்தில் சிக்கியது.

அதன்பின் நீண்ட ஆண்டுகளுக்குப் பின், கடந்த 2003-ம் ஆண்டு விமானத்தின் உடைந்த பாகங்களை தாஹா பகுதியில் கைப்பற்றினர். அதன்பின் இப்போது இந்த விமானத்தின் பாகங்களும் படைவீரர் ஒருவரின் உடலும் கைப்பற்றப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்தார்.