தூங்கும் போது பிடிச்ச கனவு வரணுமா.? கனவுகளையும் கட்டுப்படுத்த வந்தது டிவைஸ்.!



may ai controlled our dreams during sleep

தூங்கும் போது வரும் கனவுகளையும் இனி நாமே கட்டுப்படுத்தக்கூடிய சூழலை ஏஐ தொழில்நுட்பம் உருவாக்கியுள்ளது. Prophetic AI நிறுவனம் இந்த புதுமையான சாதனத்தை உருவாக்கியுள்ளது. இது தொழில்நுட்ப உலகில் பெரியளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்த சாதனம் அல்ட்ராசோனிக் எனர்ஜி மூலம் செயல்படுகிறது. தூங்கிக்கொண்டிருக்கும் போது மூளையின் செயல்பாட்டை இந்த band சாதனம் கட்டுப்படுத்துகிறது. இதன் மூலம் நாம் விரும்பும் விதத்தில் கனவு காண முடியுமாம்.

AI

மேலும், இந்த சாதனம் 2 மாடல்களில் கிடைக்கிறது. சுமார் Dual ரூ.43,000 மற்றும் Phase ரூ.1,22,000 என்ற விலைகளில் இந்த டிவைஸ் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மீது தற்போது பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த தொழில்நுட்பத்தின் மூலம் கனவில் ஏற்படும் கட்டுப்பாடற்ற நிகழ்வுகளை தவிர்க்க முடியும் என கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: Video : ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமண அலங்கார காணொளி வைரல்!!!

குறிப்பாக கெட்ட கனவுகள் காணும் பிரச்சனையை குறைக்க இது உதவும். இருப்பினும், இந்த சாதனம் உண்மையில் பலன் தருமா அல்லது பாதிப்புகளை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கமுடியும்.

இதையும் படிங்க: வாட்ஸ்அப்பின் புது அப்டேட்.. மெசேஜ்களை ‘Schedule’ செய்யும் புதிய வசதி! இனி அதெல்லாம் மறக்கவே மாட்டோம்.... குஷியில் பயனர்கள்..!!!