டெக்னாலஜி

ஆடையை ஊடுருவி பார்க்கும் கேமரா இப்படித்தான் உபயோகம் ஆகிறதா?.. அடடே அசரவைக்கும் தகவல்.!

Summary:

ஆடையை ஊடுருவி பார்க்கும் கேமரா இப்படித்தான் உபயோகம் ஆகிறதா?.. அடடே அசரவைக்கும் தகவல்.!

நாம் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பல்வேறு சாதனங்களை உபயோகம் செய்து வருகிறோம். இவற்றில் சில விலைமதிப்புமிக்க பொருட்கள், அரசினால் பாதுகாப்பு கருதி உபயோகம் செய்யப்படும். 

செல்போன்களில் இன்று திறன்மிக்க கேமராக்கள் வந்துவிட்டதால், அதனை வைத்து நிகழ்வுகளை நாம் புகைப்படமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்து வருகிறோம். 

ஆடையை ஊடுருவி பார்க்கும் கேமராக்கள் உண்மையில் ஆடையை ஊடுருவுமா? என்றால் உண்மை தான். ஆனால், அவை சி.சி.டி.வி கேமிரா போல தெளிவாக இருக்காது. உள்ளே இருக்கும் பொருட்கள் மட்டும் தெரியும்.

IR எனப்படும் In FRA RED அல்லது NIR எனப்படும் Near INFRA RED கேமரா அலைவரிசைக்கு எளிய பொருட்களை ஊடுருவும் தன்மை கொண்டது. இவற்றின் Visible Light மதிப்பு 7000 A முதல் 9000 A வரை இருக்கும். இவை ஆடையின் நூலிழையை கடந்து சென்று, நாம் உடலுடன் ஏதேனும் பொருட்களை வைத்திருந்தால் காண்பித்து கொடுக்கும். 

விமான நிலையங்களில் உள்ள பாதுகாப்பு சோதனை பகுதியில் இவ்வகை கேமிராக்கள் உள்ளன. பல படங்களில் நாம் காண்பதை போல, ஆயுதங்கள் அல்லது வெடிபொருட்கள் போன்றவை வைத்துள்ளோமா? என்பதை இதனை வைத்தும் கண்டறிந்துவிடலாம். படத்தில் காண்பிப்பதை போல சுவரை கடந்து இதனால் படம் பிடிக்க இயலாது. ஏனெனில் சுவர் கனமான பொருள். 


Advertisement