இந்தியர்களை குறிவைத்து மெகா சம்பவம்.. வெளியான ஷாக் தகவல்.! முழுவிபரம்..!



Cyber Crime in India increased 

இலவச வைபை, முதலீடு இரட்டை லாபம் என இந்தியர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். 

அதிர்ச்சி தகவல்:

இன்றளவில் ஆண்ட்ராய்டு செல்போன் உலகை நமது உள்ளங்கைக்கு கொண்டு வந்துள்ளது. கொடுக்கல்-வாங்கலில் தொடங்கி அனைத்தும் ஆண்லைன்மயமாகிவிட்ட நிலையில், மனிதர்களின் வாழ்வும் எளிதாக மாறியுள்ளது. ஆனால், தற்போது ஆன்லைனில் நடக்கும் பணமோசடிகள் அதிகரித்து  வருகின்றன. உலகளவில் நடக்கும் சைபர் குற்றங்கள் தொடர்பாக ஷேப்பர் ஹாலிடேஸ் நிறுவனம் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: 19 நிமிட அந்தரங்க வீடியோ.. நீங்கள் ஷேர் செய்தீர்களா?.. எச்சரிக்கும் நிபுணர்கள்.!

India

வைபை பயன்பாடு:

அதாவது, இந்தியர்களை குறிவைத்து அதிக மோசடி நடப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் இள வயதுள்ள நபர்களை குறிவைத்து நடக்கும் மோசடியில் பலரும் பணத்தை இழந்துள்ளனர். 23% நபர்கள் தங்களின் பாஸ்போர்ட் விபரங்களையும் பகிர்ந்து இருக்கின்றனர். இலவச வைபை பயன்படுத்தும்போது ஹேக்கர்கள் எளிதாக பணம் உட்பட தரவுகளை திருடி இருக்கின்றனர். பொது இடத்தில் வைபை பயன்படுத்திய 36% நபர்களிடம் தரவுகள் திருடப்பட்டுள்ளது.

India

புகார் அளிக்கலாம்:

அதிகாரப்பூர்வ இணையப்பக்கத்தைப்போல பயணிகளை ஏமாற்றுவது, பணம் முதலீடு இரட்டிப்பு ஆசை என மக்கள் பணத்தை இழந்து வந்துள்ளனர். தனிப்பட்ட நபரின் தகவலை திருடியும், மிரட்டியும் பணம் பறிக்க நடந்து இருக்கின்றனர். எஸ்எம்எஸ், மெயில் ஆகியவற்றில் வரும் லிங்கையும் கிளிக் செய்து பணத்தை இழந்துள்ளனர். சந்தேகிக்கும் வகையிலான சந்தர்ப்பத்தில் பணத்தை இழந்தால் www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம்.

இதையும் படிங்க: காம இச்சைக்காக குழந்தையை பலிகொடுத்த தாய்.. ஒன்றரை வயது குழந்தை உடலில் 51 காயங்கள்.. தாயும், இரண்டாவது கணவனும்.. கொந்தளிப்பு.!