குறைந்த விலையில் பைக், கார் வாங்கணுமா.? சூப்பரான வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க.!



Central Government EV Subsidy அரௌண்ட் 10000 to 50000 Discount Through eVoucher Scheme

மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் மத்திய அரசு PM E-DRIVE திட்டத்தின் கீழ் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் தகுதியான பயனாளிகள் e-Voucher மூலம் மானியத்தைப் பெற்று வாகனங்களை குறைந்த விலையில் வாங்கலாம்.

இந்தத் திட்டத்தின் கீழ் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், சில வகை மின்சார கார்கள் மற்றும் வணிகப் பயன்பாட்டு வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. வாகனத்தின் வகை மற்றும் பேட்டரி திறனைப் பொறுத்து மானியத் தொகை மாறுபடும்.

EVoucher

விண்ணப்பிக்கும் போது ஆதார் எண்ணை பயன்படுத்தி e-Voucher உருவாக்கப்படுகிறது. அதன் பிறகு அங்கீகரிக்கப்பட்ட டீலரிடம் அந்த e-Voucher-ஐ சமர்ப்பித்து, மானியத் தொகையை நேரடியாக வாகனத்தின் விலையில் கழித்துக்கொள்ளலாம். இதனால் தனியாக வங்கி கணக்கில் பணம் வரக் காத்திருக்க வேண்டியதில்லை.

இதையும் படிங்க: இ-ஸ்கூட்டர் வாங்க  ரூ.20000 தரும் அரசு.. உடனடியாக விண்ணப்பியுங்கள்.! 

வாகனத்தை வாங்குவதற்கு முன், அந்த மாடல் அரசின் மானியத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும், மத்திய அரசு அங்கீகரித்த நிறுவனங்கள் மற்றும் டீலர்களிடமிருந்து மட்டுமே இந்தச் சலுகையைப் பெற முடியும். "எலக்ட்ரிக் கார், எலக்ட்ரிக் பைக், எலக்ட்ரிக் டிராக்டர் அனைத்திற்கும் ₹10,000 முதல் ₹50,000 வரை மானியம் வழங்கப்படுகிறது.

இதற்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு மட்டுமே போதுமானது. கீழ்காணும் லிங்கை https://pmedrive.heavyindustries.gov.in/models கிளிக் செய்து உள்ளே சென்று நமக்கு விருப்பமான மாடல் மற்றும் நிறத்தை தேர்வு செய்து வாகனங்களை வாங்கிக் கொள்ள முடியும்.

இதையும் படிங்க: வங்கி கணக்கில் வந்து சேரும் ரூ.3000 பணம்...! மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு..!!!