தவெகவில் இணையப் போகும் சுந்தர் சி.?! குஷ்பூ போட்ட பக்கா பிளான்.!



Khushbu and Sundar C to Join TVK 

தமிழ் திரையுலகின் பிரபல தம்பதிகளான நடிகை குஷ்பூ மற்றும் இயக்குநர் சுந்தர்.சியின் அரசியல் நகர்வுகள் தற்போது ரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.

சுந்தர் சியின் அரசியல் ஆர்வம் :

சமீபத்தில் நடைபெற்ற சுந்தர் சி - குஷ்பூ தம்பதியரின் மகள் திருமண விழாவில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அந்த நிகழ்வில் நடிகை திரிஷாவும் பங்கேற்றது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. சுந்தர் சி திரைப்பட இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர். 

இதையும் படிங்க: அதிர்ச்சியில் எடப்பாடி! MLA பதவியை ராஜினாமா செய்த சி.விஜயபாஸ்கர்..! அடுத்தக்கட்ட அரசியல் நகர்வால் பரபரப்பு..!!!

TVK

அதே நேரத்தில் அரசியலிலும் ஆர்வம் காட்டிய அவர், பல்வேறு அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்று தனது கருத்துகளை வெளிப்படுத்தி வந்துள்ளார். குஷ்பூவின் அரசியல் பயணத்திற்கும் அவர் தொடர்ந்து ஆதரவாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. நடிகை குஷ்பூ, தேசிய அரசியலில் முக்கிய கட்சிகளில் செயல்பட்டு வந்த அனுபவம் கொண்டவர். 

தீவிர அரசியலில் குஷ்பூ:

கட்சி மாற்றங்கள், தேர்தல் பிரசாரங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் மூலம் அரசியல் களத்தில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளார். இருப்பினும், கடந்த சில மாதங்களாக அவரது அடுத்த அரசியல் நகர்வு குறித்து பல்வேறு யூகங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

இதற்கிடையில், நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் மீது திரையுலகிலும் அரசியல் வட்டாரங்களிலும் அதிக கவனம் திரும்பியுள்ளது. 

விஜயின் அரசியல் வருகைக்குப் பிறகு பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் தவெகவில் இணைந்து வரும் நிலையில், குஷ்பூ மற்றும் சுந்தர் சி இருவரும் அடுத்தடுத்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணையக்கூடும் என்ற பேச்சு அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பரவி வருகிறது. 

TVK

திரிஷாவிடம் கோரிக்கை :

சுந்தர் சி மகள் திருமணத்தில் கலந்து கொண்ட நடிகை திரிஷாவிடம், விஜயிடம் தங்களது விருப்பத்தை தெரிவிக்குமாறு குஷ்பூ கோரிக்கை வைத்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. எனினும், இந்த தகவல் தொடர்பாக குஷ்பூ, சுந்தர் சி, திரிஷா அல்லது தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இதையும் படிங்க: அடுத்த அந்தர் பல்டி! திமுகவுக்கு திடீர் அதிர்ச்சி கொடுத்த ஓ.பி.எஸ்.... தவெக-வில் இணையப்போகிறாரா?. தேனியில் பரவும் ரகசிய தகவல்!!!