கைதாகும் அளவுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் என்ன பேசினார்? வைரலாகும் சர்ச்சை வீடியோ.!
திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் கடந்த ஜூன் 20-ஆம் தேதி திருச்செந்தூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும், மரியாதைக்குறைவாகவும் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில்தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்தக் கூட்டத்தில் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், "நம்ம நடிகை வீட்டில் ஜாலியா இருந்தோமே.? இப்படி நம்மளை சட்டமன்றத்தில் உட்கார வச்சுட்டாங்களேன்னு ரொம்ப சோகமா இருந்தார். அவருடைய முகத்தையே பார்க்க முடியல, அவ்வளவு பாவமா இருந்தது" என கிண்டலாக பேசி இருக்கின்றார்.
இதையும் படிங்க: ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
அதுமட்டுமல்லாமல், விஜய் தலைமையிலான அரசு 4 முதல் 6 மாதங்களுக்கு மேல் நீடிக்காது என்றும், மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும் என்றும் அவர் பேசியிருந்தார். மேலும், விஜயின் பதவியேற்பு விழாவில் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் கலந்து கொள்ளாதது குறித்தும் தனிப்பட்ட விமர்சனங்களை முன்வைத்திருந்தார். இந்த கருத்துகளும் அப்போது பெரிய அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தின.
இந்த பேச்சுகளுக்கு எதிராக விஜய் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திருச்செந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கைது நடவடிக்கையைத் தவிர்க்க முன்ஜாமீன் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சற்றுமுன் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: அடேங்கப்பா.. நடிகை மாளவிகா மோகனனுக்குள் இப்படியொரு திறமையா!! செம கெத்தாக எங்கு சென்றுள்ளார் பார்த்தீங்களா!!