தமிழகம்

யூ டியூபர் மதனின் மனைவி கிருத்திகா கைது.! ஆத்தாடி.. யூ-டியூப் மூலம் ஒரு மாத வருமானம் இத்தனை லட்சமா.?

Summary:

தடை செய்யப்பட்ட விளையாட்டை சட்டவிரோதமாக விளையாடி இணையத்தில் பதிவேற்றியதோடு பெண்கள், சிறு

தடை செய்யப்பட்ட விளையாட்டை சட்டவிரோதமாக விளையாடி இணையத்தில் பதிவேற்றியதோடு பெண்கள், சிறுமிகளை ஆபாசமாக பேசியதாக குற்றம்சாட்டப்பட்ட  யூ டியூபர் பப்ஜி மதன் தலைமறைவாகிய நிலையில், அவரது மனைவி கிருத்திகாவை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

தடை செய்யப்பட்ட "பப்ஜி" ஆன்லைன் விளையாட்டைச் சட்டவிரோதமாக விபிஎன் எனும் இணையச் சேவை மூலம் பயன்படுத்தி சிறுவர், சிறுமிகளிடம் ஆபாசமாகப் பேசியதாக பப்ஜி மதன்மீது புகார்கள் எழுந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மதனைத் தேடிவந்தனர். அவர்மீது தமிழகம் முழுவதும் 159 புகார்கள் வந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில், யூ டியூபர் பப்ஜி மதன் தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் நிலையில், அவரது மனைவி கிருத்திகாவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மதனின் யூ டியூப் சேனலுக்கு, மனைவி கிருத்திகா தான் அட்மின் எனக் கூறப்படுகிறது. மதனுக்கு யூ-டியூப் மூலம் மட்டும் மாதம் தோறும் 7 லட்ச ரூபாய் வருமானம் வந்ததாகவும் கூறப்படுகிறது.


 


Advertisement