தமிழகம்

பலமுறை கேட்டும் பெண் தரவில்லை! வீட்டிற்குள் புகுந்து வாலிபர் செய்த காரியம்! சினிமாவையே மிஞ்சிய சம்பவம்!

Summary:

Youngman kidnapped girl for marry

ஸ்ரீவில்லிப்புத்தூர் அடுத்த மல்லிகாலனி பகுதியைச் சேர்ந்தவர் யவனம். அவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் யவனத்தை தனக்கு திருமணம் செய்து தருமாறு கோவையை சேர்ந்த அவரது உறவினரான பவித்திரன் என்பவர் தொடர்ந்து இருமுறை பெண்கேட்டு வந்துள்ளார். ஆனால் அதற்கு யவனத்தின் பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த பவித்திரன் தனது உறவினர்கள் 5 பேருடன் யவனம் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவரது தாய் மற்றும் சகோதரியை  தாக்கிவிட்டு யவனத்தை இழுத்து வந்து இருசக்கரவாகனத்தில் நடுவில் அமரவைத்து கடத்திச் செல்ல முயன்றுள்ளனர்.அப்பொழுது அவர்களிடமிருந்து தப்பிக்க முயற்சி செய்தபோது, யவனம் வாகனத்திலிருந்து கீழே விழுந்து, அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

அப்போதும் அவர்கள் இரக்கமின்றி கார் ஒன்றை வரவழைத்து, அதில் யவனத்தை ஏற்றி சென்று, மலையடிப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டில் அடைத்து வைத்துள்ளனர். இதற்கிடையே யவனத்தின் தந்தை இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்த நிலையில்,போலிசார் பவித்திரனின் செல்போன் எண்ணை டிராக் செய்து அவர் இருக்குமிடத்தை கண்டறிந்தனர். அதனை தொடர்ந்து அங்கு விரைந்த போலீசார் யவனத்தை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் கடத்தலில் ஈடுபட்ட பவித்ரன் மற்றும் அவருக்கு உதவிய 5 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


Advertisement