தாய் இறந்து, தந்தை கைவிட்ட 16 வயது சிறுமி! வீட்டில் தனியாக இருந்தபோது பாலியல் தொல்லை கொடுத்த சித்தப்பா!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவியை அவரது தாய் இறந்த நிலையில், தந்தையும் கைவிட்டுவிட்டு சென்றுள்ளார். இந்தநிலையில் அந்த மாணவி அவரது சித்தியின் பராமரிப்பில் இருந்துள்ளார்.
இந்தநிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றின் விடுதியில் தங்கி படித்து வருகிறார் அந்த மாணவி. நேற்று முன் தினம், அந்த மாணவிக்கு காதுவலி வந்ததால் சிகிச்சை பெறுவதற்காக அவரது சித்தி வீட்டுக்கு வந்துள்ளார்.
இந்தநிலையில் வீட்டில் சிறுமி தனியாக இருந்தபோது, அவரது சித்தியின் கணவர் அதாவது அவரது சித்தப்பா மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த சிறுமி அலறல் சத்தம் போட்டுள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் சிறுமியை மீட்டனர்.
அக்கம்பக்கத்தினர் வந்ததும் சிறுமியின் சித்தப்பா தப்பி ஓடிவிட்டார். இந்தநிலையில் பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின்பேரில் மாணவியின் சித்தப்பா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மகள் ஸ்தானத்தில் உள்ள பெண்ணை வன்புணர்வு செய்யமுயன்ற கொடூர செயல் மக்களிடையே கடும் எரிச்சலை ஏற்படுத்தியது.