வசூலில் டாப்.. பாலையா டான்ஸ் வீடியோ வைரல்.! மகிழ்ச்சியில் ஊர்வசியுடன் நடனமாடி குதூகலம்.!
இளம்பெண்ணை கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி வீசிய நபர்.! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.!
புதுச்சேரியில் இளம்பெண் ஒருவரை கொடூரமாக கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி அடுத்த வில்லியனூர் கனுவாபேட்டையைச் சேர்ந்தவர் பாலபாஸ்கர். பாஸ்கரின் மனைவி ஆரோக்கியமேரி கனகசெட்டிகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்தநிலையில் ஆரோக்கியமேரி கடந்த 19ஆம் தேதி வழக்கம்போல் வேலைக்கு சென்றநிலையில் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது கணவர் பாலபாஸ்கர் வில்லியனூர் காவல் நிலையத்தில் வேலைக்கு சென்ற தனது மனைவியை காணவில்லை என புகார் அளித்தார். இதனையடுத்து இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் மாயமாகிய ஆரோக்கியமேரியை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் ஆரோக்கியமேரியுடன் வேலை செய்யும் ரமேஷ் என்பவர் சாலை மறியலில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் ரமேஷை கைது செய்து விசாரித்ததில் ஆரோக்கியமேரியை கொலை செய்து பூத்துறை பகுதியில் வீசியதை ஒப்புக்கொண்டார். பின்னர் சாக்கு மூட்டையில் இருந்த உடலை கைப்பற்றி கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ரமேஷிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.