தமிழகம்

வெளிநாட்டில் கணவர்.! இளைஞருடன் உல்லாசமாக இருந்த 36 வயது பெண்.! காட்டிக்கொடுத்த சிசிடிவி.! இறுதியில் நடந்த பரிதாபம்.!

Summary:

கணவர் வெளிநாட்டில் இருக்கும்நிலையில், இளைஞரை காதலித்த 36 வயது பெண் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடலூா் மாவட்டம், புவனகிரி பேருந்து நிலையம் அருகே, தனியாா் கணினி மையம் அருகில் அழுகிய நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக புவனகிரி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். 

போலீசார் நடத்திய விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவா் புதுச்சேரி, மதகடிப்பட்டு பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மனைவி சத்யா என்பது தெரியவந்தது. இவா்களுக்கு 2 மகன்கள் உள்ளனா். ராஜேந்திரன் வெளிநாட்டில் பணிபுரிகிறாா். இந்தநிலையில் போலீசார் சம்பவம் நிகழ்ந்த இடத்தில இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், கடந்த மாதம் 29-ஆம் தேதி இரவு அந்த கட்டிடத்திற்கு சந்தியாவை ஒரு ஆண் நபர் அழைத்து செல்லும் காட்சி இருந்தது.

இதனையடுத்து மறுநாள் காலையில், அந்த நபர் மட்டுமே தனியாக வந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மாறன் என்பவருக்கும், சத்யாவுக்கும் தொடா்பு உள்ளது தெரியவந்தது. மாறன் புவனகிரியில் தனியாா் கணினி மையத்தில் பணிபுரிந்து வந்துள்ளாா். 

இந்தநிலையில் மாறனை சந்திக்க வந்த சத்யா, கொலை செய்யப்பட்டுள்ளாா். இதனையடுத்து தலைமறைவான மாறனை போலீஸாா் பிடித்து விசாரித்தபோது,  கணவர் ஊரில் இல்லாத நிலையில் இருவரும் தனிமையில் சந்தித்துவந்துள்ளனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று மாறனை சத்யா தேடிச் சென்றுள்ளார். அப்போது தன்னை திருமணம் செய்துகொள்ள சத்யா வற்புறுத்தியதால் போதையில் இருந்த மாறன், சத்யாவை கொலை செய்துள்ளது தெரியவந்தது.


Advertisement