தமிழகம்

பணத்திற்காக இளம் பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறிய நபர்! இவர்களது கூட்டு ஆசைக்காக உயிரிழந்த ஏழை டிரைவர்! அதிர்ச்சி சம்பவம்!

Summary:

young women killed car driver


ராமநாதபுரத்தை சேர்ந்தவர் நாகநாதன் 51 வயது நிரம்பிய இவர் கடந்த மாதம் 15-ஆம் தேதி, மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள சாவரப்பட்டி பகுதியில் உள்ள கால்வாயில் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதனையடுத்து நடந்த போலீஸ் விசாரணையில், அவர் சென்னை அசோக் நகரில் உள்ள ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில் 9 ஆண்டுகளாக டிரைவராக வேலை பார்த்து வந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து குற்றாலம் செல்வதற்காக காரை, புக் செய்த சென்னையைச் சேர்ந்த ஜெயசுதா, என்ற இளம் பெண் தலைமறைவானது காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவரை திருச்சியில் போலீசார் கைது செய்தனர்.

இதனையடுத்து போலீசார் கூறுகையில், ஜெயசுதாவின் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர், பெரோஸ் அகமது. பணப்பிரச்சனையில் இருந்த ஜெயசுதாவிடம், காரை கடத்தி விற்று சம்பாதிக்கலாம் என, ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனால் ஜெயசுதா, புதுச்சேரி ஹோட்டல் ஒன்றில், தன்னுடன் வேலை செய்த ஜெகதீஷ் மற்றும் காதலன் ஹரிகரன் உள்ளிட்டோரை கூட்டாளிகளாக சேர்த்து, திட்டம் தீட்டியுள்ளார்.

இதனையடுத்து சென்னை தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தை, கடந்த மாதம் 5-ஆம் தேதி தொடர்பு கொண்டு, குற்றாலம் செல்ல வேண்டும் எனக் கூறி, காரை ஜெயசுதா, புக் செய்துள்ளார். இதற்காக காரை நாகநாதன் ஓட்டியுள்ளார். இந்தநிலையில் குற்றாலத்தில் இருந்து, கடந்த மாதம் 9-ஆம் தேதி, சென்னை திரும்பும் வழியில், கொட்டாம்பட்டி, சாவரப்பட்டி அருகே, நாகநாதனை கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்து, கால்வாயில் வீசி, காரை கடத்தி, திருச்சி சென்றனர்.

உறையூரில் காரின் கலர், நம்பர் பிளேட்டை மாற்றுவதற்காக, பெயின்டர் ஒருவரிடம் காரை விட்டனர். சந்தேகமடைந்த பெயின்டர், உள்ளூர் போலீசாருக்கு கொடுத்த தகவல் தெரிவிக்க, நான்கு பேரையும் கைது செய்தது தெரியவந்துள்ளது.


 


Advertisement