காவல் உதவி ஆய்வாளர் என கூறி தமிழ் ஆசிரியையிடம் பழகி பணத்தை ஆட்டையை போட்ட இளம்பெண்.!

காவல் உதவி ஆய்வாளர் என கூறி தமிழ் ஆசிரியையிடம் பழகி பணத்தை ஆட்டையை போட்ட இளம்பெண்.!


young women cheated school teacher

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அமராவதி புதூரை சேர்ந்த வடிவுக்கரசி என்பவர் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் இவர் சில மாதங்களுக்கு முன்பு பேருந்தில் செல்லும்பொழுது பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த பெண் தேவசேனா என்ற பெண்ணுடன் அறிமுகமாகியுள்ளார். 

தேவசேனா தென்காசி காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருவதாகவும், தனது சொந்த ஊர் தொண்டி என்றும் வடிவுக்கரசியிடம் கூறியுள்ளார். இதனையடுத்து இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் அடிக்கடி போனில் பேசிக் கொள்வதும், தேவசேனா வடிவுக்கரசியின் வீட்டுக்கு வந்துசெல்வதுமாக இருந்துள்ளார்.

இந்நிலையில் திடீரென ஒருநாள், தேவசேனா வடிவுக்கரசிக்கு போன் செய்து எனது அம்மா உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ செலவிற்கு அவசரமாக ரூ.50 ஆயிரம் தேவைப்படுகிறது, கடனாக கொடுங்கள் சில நாட்களில் திருப்பி கொடுத்து விடுகிறேன் என கேட்டுள்ளார். இதனையடுத்து வடிவுக்கரசி அவரது கணவரிடம் கூறி இணையதளம் வழியாக ரூ.50 ஆயிரத்தை தேவசேனாவிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து வடிவுக்கரசியின் செல்போன் அழைப்பை தேவசேனா தவிர்த்துவந்துள்ளார்.

teacher

இதனால் சந்தேகம் அடைந்த வடிவுக்கரசியும் அவரது கணவரும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டதில் அவர் வடிவுக்கரசியை தான் சப்-இன்ஸ்பெக்டர் என கூறி ஏமாற்றியது தெரியவந்தது. இதனையடுத்து தேவசேனாவை போலீசார் கைது செய்தனர்.