தமிழகம்

காதல் தம்பதி எடுத்த விபரீத முடிவு.! கடிதத்தில் எழுதிய உருக்கமான வார்த்தைகள்.!

Summary:

மயிலாடுதுறை மாவட்டத்தில் கணவன், மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள

மயிலாடுதுறை மாவட்டத்தில் கணவன், மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், கடுவேலி செங்கமேட்டு தோப்பில் ஒரு ஆணும், பெண்ணும் தனித்தனியே தூக்கிட்டு சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து திருச்சம்பள்ளி கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், இறந்தவர் கும்பகோணம் பட்டீஸ்வரம் சோழன்மாளிகையை சேர்ந்த பெரியசாமி என்பதும், இவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு செம்பனார்கோவில் வல்லம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு மாமனார்வீட்டில் வசித்து வந்ததும் தெரியவந்தது.

அவர்கள் சடலத்திற்கு அருகே கடிதம் ஒன்று கிடந்துள்ளது. அந்த கடிதத்தில், நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்வது எங்களது உறவினர்களுக்குப் பிடிக்கவில்லை, அதனால் எங்களை யாரும் மதிப்பதில்லை, இதனால் தான் இந்த முடிவை எடுத்தோம். நாங்கள் யாரிடமும் கடன் வாங்கவில்லை, ஈரோட்டில் சீட்டுப் போட்டுவைத்துள்ளோம்.

வீட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருள்களும் வீட்டில் வைத்திருக்கிறோம், அதை எடுத்துக் கொள்ளவும். எங்கள் இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை, எங்களது உறவை உறவினர்கள் ஏற்றுக் கொள்ளாததால் மன விரக்தியில் இந்த முடிவு எடுத்துள்ளோம் என எழுதப்பட்டிருந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement