குஷ்பு மேடம்.. நீங்கள் அப்போது எதிர்ப்பு தெரிவித்தீர்களா.? என கேட்ட நபர்.! குஷ்பு அளித்த பதில்.!

குஷ்பு மேடம்.. நீங்கள் அப்போது எதிர்ப்பு தெரிவித்தீர்களா.? என கேட்ட நபர்.! குஷ்பு அளித்த பதில்.!



young-man-tweet-about-kushboo

தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாவது அலை வேகமெடுத்து வந்ததால், கடந்த மே மாதம் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் அணைத்து டாஸ்மாக் மதுபான கடைகளும் மூடப்பட்டது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துவருவதால் ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நேற்று முதல் தமிழகத்தில் மீண்டும் மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளது. 

இந்தநிலையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பைக் கண்டித்து பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து போராட்டமும் நடத்தினர். பாஜகவில் இருக்கும் நடிகை குஷ்புவும் டாஸ்மாக் திறப்பதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.


இந்தநிலையில் அஹமத் பாஷா என்ற நபர் அவரது ட்விட்டர் பக்கத்தில், "நீங்கள் அதிமுக உடன் இருந்திருக்கிறீர்கள் ... அவர்கள் டாஸ்மாக்கை மூடினார்களா? நீங்கள் எதிர்ப்பு தெரிவித்தீர்களா? இது அவர்கள் கொடுத்த தளர்வு. கர்நாடக மற்றும் பாண்டிச்சேரியில் என்ன நடக்கிறது? எந்தப் பயனும் இல்லை மேடம் ... தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும் என குறிப்பிட்டு இருந்தார்.

அவரது பதிவிற்கு பதிலளித்த குஷ்பு, "நீங்கள் நாள் பகல் கனவு காண்கிறீர்களா? நான் எப்போது அதிமுக உடன் இருந்தேன்?? நீங்கள் ஒரு கேள்வியை எழுப்புவதற்கு முன்பு உண்மைகளை சரியாக தெரிந்துகொள்ளுங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.