நிலைதடுமாறி ஓடைக்குள் புகுந்த கார்.! உயிருக்கு போராடிய 5 பேர்.! வேடிக்கை பார்த்த மக்கள்.! தன் உயிரை துச்சம் என நினைத்து இளைஞன் செய்த செயல்.!

நிலைதடுமாறி ஓடைக்குள் புகுந்த கார்.! உயிருக்கு போராடிய 5 பேர்.! வேடிக்கை பார்த்த மக்கள்.! தன் உயிரை துச்சம் என நினைத்து இளைஞன் செய்த செயல்.!



young man saved people from water

கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மதுரையில் உள்ள வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் ஆற்றிலிருந்து, மாரநாடு கண்மாய்க்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

தன் காரணமாக மதுரை, ராமேஸ்வரம் இடையேயான நான்கு வழி சாலையோரமாக உள்ள கால்வாயில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில் அந்த வழியாக நேற்றுமுன்தினம் மாலை லாடனேந்தல் மற்றும் திருப்பாச்சேதி தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று மானாமதுரை நோக்கி சென்றுக்கொண்டிருந்துள்ளது. அப்போது அந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த ஓடைக்குள் புகுந்தது.

இதனால் காரின் உள்ளே இருந்த 5 பேர் உயிருக்கு போராடியுள்ளனர். சுமார் ஒரு மணி நேரமாக காருக்குள் இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் வெளியே வர முடியாமல் தவித்துள்ளனர். இதை அங்கிருந்த மக்கள் பலர் காப்பாற்ற முயற்சிக்காமல் வேடிக்கை பார்த்து கொண்டிருந்துள்ளனர். 

car

அப்போது அந்த சாலை வழியாக திருப்புவனம் பகுதியை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்ற ஓட்டுநர் உடனடியாக ஓடையில் குதித்து அந்த வாகனத்தில் இருந்த 3பெரியவர்கள் 2குழந்தைகளை உயிரோடு மீட்டுள்ளார். தன் உயிரை துச்சம் என நினைத்து 5பேரை மீட்ட திருப்புவனம் முத்துக்கிருஷ்ணனை அங்கிருந்தவர்கள் அவரை பாராட்டினர். அதுமட்டுமின்றி அவரின் புகைப்படம் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.