ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவி பலாத்காரம்.. போலீசார் அதிரடி நடவடிக்கை.!

ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவி பலாத்காரம்.. போலீசார் அதிரடி நடவடிக்கை.!


Young man raped school girl in Salem

சேலம் அருகே ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரன். இவர் அதே பகுதியை சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் காதலிப்பதாக கூறி நெருங்கி பழகி வந்துள்ளார். இதனிடையே சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி 4 நாட்கள் அடைத்து வைத்து அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

Salem

இந்த சம்பவம் குறித்து சிறுமியை தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Salem

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள ஹரிஹரனை தீவிரமாக தேடி வருகின்றனர். பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.