மாற்று சமூக பெண்ணுடன் காதல்! பெரியம்மா வீட்டிற்கு பெண்ணை அழைத்து வந்த காதலன்! அதன் பின் நடந்த விபரீதம்!



young man deadbody in rajapalayam

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள அக்கரைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன். இவர் கொத்தனராக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கும் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு, இருவருக்கிடையே காதல் ஏற்பட்டுள்ளது.

இரண்டு பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி, கடந்த திங்கட் கிழமை மகேந்திரன் தன் காதலியை ராஜபாளையத்தில் உள்ள அவரது பெரியம்மா வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இதனையடுத்து பெண் காணாமல் போனதால், அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் தேடியுள்ளனர். பின்னர் பெண் காணாமல் போனது பற்றி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து அந்த பெண்ணை மகேந்திரனின் உறவினர்கள் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அப்போது, பெண்ணை பெற்றோருடன் அனுப்பி வைக்க போலீசார் வலியுறுத்தியுள்ளனர். அதன் பின் காதலியை அவர்களுடன் ஒப்படைத்துவிட்டு தன் பெரியம்மா வீட்டுக்கு மகேந்திரன் வந்துவிட்டார்.

young boy

ஆனால் நேற்று மாலை முதல் மகேந்திரனை காணவில்லை. இதனால் உறவினர்கள் பதட்டமடைந்து பல இடங்களில் தேடினர். இந்நிலையில் சங்கரன் கோவில் செல்லும் சாலையில் உள்ள தனியார் ஆலையின் பின்புறம் உள்ள கிடங்கு அருகே மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மகேந்திரனின் உடல் கண்டெடுக்கப்பட்டது. பெண்ணின் உறவினர்கள்தான் மகேந்திரனை கடத்திச் சென்று கொன்று விட்டதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளதால், இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.