இரவில் வீட்டுக்குள் புகுந்து 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சித்த இளைஞன்! இறுதியில் நேர்ந்த துயரம்!.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சாமிவேல். இவரின் மனைவி சின்னபொண்ணு. இவர்களுக்கு ராஜலட்சுமி என்ற மகள் உள்ளார்.
கிராமம் என்றாலே குழந்தைகள் வெட்டவெளியில் விளையாடுவது வழக்கம். எப்போதுமே ராஜலட்சுமி மற்றும் அப்பகுதியில் வசிப்பவர்கள் கேலி கிண்டல் செய்து விளையாடுவதை வழக்கமாய் வைத்துள்ளனர்.
அதேபோல் அப்பகுதியை சேர்ந்த கார்த்தி என்ற இளைஞனும் கிண்டல் செய்தார். ஆனால் நாளடைவில் சிறுமியை தவறான நோக்கில் பார்த்துவந்துள்ளார். நேற்றிரவு சிறுமியின் வீட்டுக்குள் கார்த்தி போதையில் சென்றுள்ளார்.
தூங்கிக்கொண்டிருந்த சிறுமி ராஜலட்சுமியை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதையடுத்து சிறுமி சத்தம்போட்டுள்ளார், இதனையடுத்து அங்கு வந்த அவர் தாய் சின்னப்பொண்ணு கார்த்தியை தடுத்துள்ளார்.
அவரை கீழே தள்ளிய கார்த்தி ஆத்திரத்தில் தன்னிடம் இருந்த கத்தியால் ராஜலட்சுமியின் கழுத்தை தனியாக துண்டித்து எடுத்துள்ளார். பின்னர் தலையை கையில் எடுத்து கொண்டு தெருவில் நடந்து வந்துள்ளார்.
இதை பார்த்த கார்த்தியின் மனைவி, கணவனை போலீசில் பிடித்து கொடுத்தார். இதனையடுத்து கார்த்தி மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.