தமிழகம்

18 வயசாகட்டும்! தனது நீண்ட நாள் ஆசை நிறைவேறாததால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

Summary:

Young man commits suicide for not buying bike

சென்னை ராமாபுரம் அண்ணாநகர்  பகுதியில் வசித்து வருபவர் பாஸ்கரன். இவரது மகன் யஷ்வந்த். இவர் கிண்டியில் உள்ள ஐடிஐ-யில் படித்துவந்தார். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருந்துவந்த யஷ்வந்த்,  தனக்கு விலையுயர்ந்த பைக்கை வாங்கித்தாருங்கள் என கேட்டு அடிக்கடி அவரது தந்தையிடம் சண்டை போட்டுவந்துள்ளார். அவரோ உனக்கு 18 வயதான பிறகு பைக் வாங்கித் தருகிறேன் என தொடர்ந்து கூறிவந்துள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய நீண்ட நாள் பைக் ஆசை நிறைவேறாத மனவேதனையில் இருந்த யஷ்வந்த் கடந்த 12-ம் தேதி தனது வீட்டு மாடியில் உள்ள அறையில் புடவையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இந்நிலையில் நீண்ட நேரமாகியும் அவர் கீழே இறங்கி வராததால் அவரது பெற்றோர்கள் மாடிக்குச் சென்று பார்த்தபோது அதிர்ச்சியடைந்து கதறி துடித்துள்ளனர். பின்னர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டநிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் யஷ்வந்த் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்புதான் யஷ்வந்தின் தாத்தா உயிரிழந்தார். இந்நிலையில் யஸ்வந்த் உயிரிழந்தது குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 


Advertisement