ஊரடங்கில் கண்ணை மறைத்த காதல்..! தஞ்சை டூ மதுரை டிக் டாக் காதலனை சந்திக்க 200 கி.மீ நடந்தே சென்ற இளம் பெண்..! அங்கு அவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!Young girl walk 200 KM to meet tik tok lover

தஞ்சாவூரை சேர்ந்த பி.எஸ்சி பட்டதாரி பெண் டிக்-டாக் மூலம் மதுரை ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் அறிமுகமாகி உள்ளார். அந்த பெண் ஒருதலையாக அந்த வாலிபரை காதலித்து வந்ததாகவும், இதையறிந்த அந்த இளைஞர் அந்த பெண்ணுடன் டிக்-டாக் பழக்கத்தை கைவிட முயன்றதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில், ஊரடங்கு அமலில் உள்ளதால் கடந்த வாரம் அந்த பெண், மதுரை வாலிபரை பார்ப்பதற்காக தஞ்சையில் இருந்து பைபாஸ் ரோடு வழியாக மதுரைக்கு நடந்து வருவதாக கூறி, டிக்-டாக் மூலம் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

tik tok

தஞ்சையில் இருந்து மதுரைக்கு 200 கிலோ மீட்டர் தூரம் தனியாக மதுரையை நோக்கி நடந்துவருவதாகவும், சாலையில் நடந்து வரும் வீடியோ காட்சிகளையும், காதல் பாடல்களை பாடி, தற்போது எந்த இடத்தில் வருகிறேன் என்பதையும் வீடியோ பதிவாக செல்போனில் படம் பிடித்து அவ்வப்போது அதனையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் அந்தப் பெண், நேற்று மதியம் மதுரை மாவட்டம் மேலூர் அருகில் நடந்து வந்துவிட்டதாகவும், அந்த வாலிபரின் பெயரை குறிப்பிட்டு தன்னை மோட்டார் சைக்கிளில் வந்து அழைத்து செல்லும்படி கூறி ஒரு வீடியோவை டிக்-டாக் மூலம் பதிவு செய்தார். இவரது வீடியோவை வலைத்தளங்களில் பார்க்கும் பலரும் அவருக்கு அறிவுரை வழங்கியும், திட்டியும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.