தமிழகம்

ஆசையாய் வளர்த்த நாய்க்குட்டிக்காக தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்! அதிர்ச்சி சம்பவம்!

Summary:

young girl suicide for dog


கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள கூடலூர் கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரின் மகள் கவிதா தனியார் பத்திர அலுவலகத்தில் வேலை செய்து வந்துள்ளார். 

கவிதாவிற்கு நாய் குட்டி வளர்ப்பது மிகவும் பிடிக்கும் என்பதால் கடந்த இரண்டு வருடங்களாக நாய் ஒன்றினை வீட்டில் வளர்த்து வந்துள்ளார். அந்த நாய் குட்டிக்கு சீசர் என பெயர் வைத்து மிகவும் செல்லமாக வளர்த்து வந்துள்ளார்.

அந்த நாய் நள்ளிரவில் குரைத்து கொண்டே இருந்ததால் உறங்க முடியவில்லை என பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் பெருமாளிடம் புகார் கூறியுள்ளனர். இதனால் பெருமாள் நாயை காரணம் காட்டி தனது மகளை திட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கவிதா வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். 

இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் அங்கு கவிதா எழுதிவைத்த கடிதம் ஒன்றினை கைப்பற்றினர். அதில், "அம்மா, அப்பா, தம்பி என்னை மன்னித்துவிடுங்கள். எனது செல்ல நாய் சீசரை நன்றாக பார்த்து கொள்ளுங்கள். என் சாவுக்கு காரணம் யாருமில்லை"  என அந்த கடிதத்தில் எழுதியிருந்தது.

ஆசையாய் வளர்த்த நாய்க்காக ஒரு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement