பொள்ளாச்சியில் மீண்டும் கொலைநடுங்க வைத்த கொடூர சம்பவம்! இதுதான் காரணமா?

பொள்ளாச்சியில் மீண்டும் கொலைநடுங்க வைத்த கொடூர சம்பவம்! இதுதான் காரணமா?


young girl killed by one side love

திண்டுக்கல் மாவட்டம் ஓட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த 20 வயது மாணவி பிரகதி. இவர் கல்லூரி விடுதியில் தங்கி கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் இவர்  கடந்த வெள்ளிக்கிழமை அன்று திருமணத்திற்கு ஆடைகள் எடுக்க , தனது சொந்த ஊருக்கு கிளம்பியுள்ளார்.

ஆனால், அவர் வெகுநேரமாகியும் வீட்டிற்கு வராதநிலையில்,  பதற்றமடைந்த பெற்றோர்  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர்.

pollachi

இந்நிலையில்,  பொள்ளாச்சியை அடுத்த பூசாரிப்பட்டி என்னும் கிராமத்தில்  கழுத்து அறுக்கப்பட்டு கல்லூரி மாணவியின் சடலம் கிடப்பதை போலீசார் கண்டறிந்தனர். 

மாணவியின் தங்க நகைகள் திருடு போகாமல் இருந்ததால், இந்தக் கொலை நகைக்காக நடக்கவில்லை என்பது தெரியவந்தது. மேலும் மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டுள்ளது.

இதனிடையே மாணவி பிரகதியை மர்ம நபர்கள் காரில் கடத்திச்சென்று கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்த நிலையில்,  சிசிடிவி ஆய்வின் மூலம் சதிஷ் என்பவர் மீது சந்தேகம் அடைந்து அவரை கைது செய்துள்ளனர்.

pollachi

மேலும் சதிஷ் பிரகதியின் உறவினர் எனவும், அவர் ஒருதலையாக பிரகதியை காதலித்துள்ளார், அவருக்கு   திருமணமாகி குழந்தைகள் உள்ளனர் எனவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.