தமிழகம்

கர்ப்பமாகி குழந்தை பெற்ற தமிழகத்தை சிறுமி! பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!


நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை சேர்ந்த 17 வயது சிறுமியும், ஆரியூர்நாடு குழிவளவு பகுதியைச் சேர்ந்த 22 வயது நிரம்பிய நந்தகுமார் என்பவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

நந்தகுமார் அந்த சிறுமிக்கு திருமண ஆசை காட்டி தவறுதலாக நடந்துள்ளார். இதன்காரணமாக சிறுமி கர்ப்பமாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதையறிந்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் அவரிடம் விசாரித்து நடந்த விஷத்தை பற்றி அறிந்தனர். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் நந்தகுமாரிடம் திருமணம் குறித்து பேசியுள்ளனர். ஆனால் நந்தகுமார் திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அதிர்ச்சியடைந்த பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் நந்தகுமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


Advertisement