தமிழகம்

தம்பி என்கூட வாங்க.. என் மகளை கட்டி தாரேன்.. மகளை காதலித்த வாலிபரை அழைத்துச் சென்று கொலை செய்த நபர்..

Summary:

மகளை காதலித்த வாலிபரை திருமணம் செய்து வைப்பதாக அழைத்துச் சென்று கொலை செய்த நபரை போலீசார் க

மகளை காதலித்த வாலிபரை திருமணம் செய்து வைப்பதாக அழைத்துச் சென்று கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தாண்டரப்பள்ளி என்னும் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமண செட்டியார் (55). இவர் தனது குடும்பத்தினருடன் பெங்களுருவில் வசித்துவரும்நிலையில், அதே பகுதியில் காய்கறி கடை வைத்து வியாபாரம் செய்துவந்துள்ளார்.

இந்நிலையில் லட்சுமணன் கடைக்கு அருகே இருக்கும் மற்றொரு கடையை சேர்ந்த வசந்த் (எ) நவீன் (25) என்ற இளைஞர் லட்சுமணனின் மகளை காதலித்துவந்துள்ளார். இந்த விவகாரம் லட்சுமணனுக்கு தெரியவர, அவர் அந்த இளைஞரை பலமுறை கண்டித்துள்ளார். ஆனாலும் அந்த இளைஞர் தனது காதலை தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் அந்த இளைஞரை கொலை செய்ய திட்டமிட்ட லட்சுமணன், அந்த இளைஞரிடம் சென்று, தனது மகளை ஓசூர் அடுத்த பேரிகை அருகே உள்ள தனது உறவினர் வீட்டிற்கு அனுப்பியுள்ளேன். நீயும் என்னுடன் வந்தால், நாம் இருவரும் அங்கு சென்று, உறவினர்கள் முன்னிலையில் திருமணம் குறித்து பேசி முடிவு செய்வோம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நவீனும் நம்பி, லட்சுமணன் கூப்பிட இடத்திற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் நேற்றுமாலை நவீன், லட்சுமணன் இருவரும் மது அருந்தியுள்ளனர். நவீனுக்கு போதை தலைக்கேறிய நிலையில், அருகில் இருந்த கட்டையை எடுத்து லட்சுமணன் நவீனை அடித்து கொலை செய்துள்ளார். பின்னர் மறுநாள் காலை அருகில் இருந்த காவல் நிலையத்தில் சரணடைந்த லட்சுமணன் நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று நவீனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் லட்சுமணனை கைது செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும் இதை கொலை ஜாதி ரீதியாக நடந்த ஆணவக் கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement