காதலித்து திருமணம்: 26 நாட்களிலில் இளம் பெண்ணிற்கு ஏற்பட்ட சோகம்! என்ன நடந்தது தெரியுமா?
காதலித்து திருமணம்: 26 நாட்களிலில் இளம் பெண்ணிற்கு ஏற்பட்ட சோகம்! என்ன நடந்தது தெரியுமா?

காதலித்து திருமணம் செய்து 26 நாட்களே ஆன நிலையில் புது பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மன்னார்குடியை சேர்ந்த பிரகாஷ் என்ற வாலிபரும், அதே பகுதியை சேர்ந்த நந்தினி என்ற பெண்ணும் கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வந்துள்ளனனர்.
இந்நிலையில் இருவீட்டார் சம்மதத்தோடு சமீபத்தில் இருவரும் திருமணம் முடிந்துள்ளது. திருமணத்திற்கு பிறகு கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. மேலும், திருமணத்தின்போது பெண் வீரர் ப்ரகாஷிற்கு புது மோட்டார் பைக் வாங்கி கொடுத்துள்ளனனர்.
அந்த பைக்கை பிரகாஷ் விற்க முற்பட்டுள்ளார். மோட்டார் பைக்கை விற்க கூடாது என நந்தினி சண்டை போட்டுள்ளார். இப்படி இருவருக்கும் இடையே தினமும் சண்டை வந்துள்ளது. இதனால் மனமுடைந்த நந்தினி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதுகுறித்து அந்த பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன்னார்.